ஜனாதிபதி தேர்தல் வேண்டாம், பாராளுமன்ற தேர்தலை முதலில் நடாத்துங்கள் - ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுவதனை விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனையே தமது கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பாராளுமன்றம் மக்களின் அபிலாஸைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை புதிதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதனையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில முக்கியமான விடயங்களின் போது சில அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டை எட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல்கள் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் அணி திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நரி வருது, நரி வருது. . . .
ReplyDeleteமுதலில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால்,
ReplyDeleteதற்போதுள்ள நிலையில் SLMC அரசுடன் இருந்தவாறு முஸ்லிம் மக்களிடம் வாக்குக்கேட்டு செல்லவேண்டிய நிலை ஏற்படும். இது SLMC க்கு சங்கடமானது.
என்பதை உணர்ந்த தலைவர் "பாராளுமன்ற தேர்தலை முதலில் நடாத்துங்கள்" என்கிறார்.
உண்மையில் தலைவர் பயப்படுகிறார் என்பது தெழிவாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலை முதலில் நடாத்த அரசு தீர்மானித்தால் இப்போவே அமைச்சு பதவியை தூக்கியெறிந்து விட்டு அரசைவிட்டி வெளியேறி முஸ்லீம்கள் மத்தியில் பம்மாத்துக்காட்டுவர், நல்லபிப்பிராயம் தேட முற்படுவர்.
மேலும் முஸ்லீம்களது ஆதரவை பெறுவதர்க்கு தற்போதைய நாட்டுச்சூழலில் நிறையேவே விடயங்கள் இருக்கிறது. அவைகளில் ஒன்று 989+BBS போன்ற இன்நோரன்ன கதைகளைச்சொல்லி மக்களை ஏமாற்றலாம்.
ஆனால் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடந்தால், அரசுக்கு சார்பாகவே தேர்தல் செய்யவேண்டிய இக்கட்டான நிலமை உள்ளது. எனவே அமச்சுப்பதவியை துறப்பது எப்படி ?
போன்ற உண்மையான உள்நோக்கத்தை எவ்வாறு மூடிமறைக்கிறார் என்பதைப்பாருங்கள் SLMC தலைவர்.
முழுப்பூசணிக்காயை சோற்றில் நன்றாக மறைக்க கற்றுக்கொடுத்தது யாரோ ???
பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் வருமாயின் அந்நிலமையானது, SLMC தான் விரும்பியவாறு பெள்டியடிக்க உதவும்.
எந்த தேர்தலாக இருந்தாலும், மரச்சின்னத்துக்கே எங்கள் வாக்கு என இருக்கும் வடக்கு, கிழக்கு முஸ்லீம்கள் இருக்கையில் எதர்க்கு அச்சின்னத்தின் தலைமை பயப்படவேண்டும்.
எத்தேர்தலாக இருந்தாலும் மரம் சொல்வதை செய்வோம் - இதுவே எங்கள் கொள்கை என்ற வாக்கு வங்கியிருக்க நமக்கேன் பயம் என்று தலைமை உணரவேண்டும்.