Header Ads



பௌத்தர்களையும் பௌத்தத்தையும் பாதுகாக்க, மஹிந்த ராஜபக்ச சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்

பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பௌத்தர்களையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்.

வெட்கம் இருந்தால் இந்த சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு ஆட்சியாளரும் பௌத்தர்களை பாதுகாக்க மெய்யாகவே நடவடிக்கை எடுக்கவில்லை.

சட்டவிரோத மதமாற்றம், பௌத்த பிரசூர நியமச் சட்டம், பௌத்த விஹாரை மற்றும் தேவாலய கட்டளைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும்.

18ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனால் நாட்டுக்கோ பௌத்தர்களுக்கோ நன்மை ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அதைவிட முக்கியம் பெளத்ததை பாதுகாக்கின்றோம் என்று காவியுடையினுள் புகிந்திருக்கும் பயங்கரவாதிகளை கூண்டிலடைக்க முக்கியமானதொரு சட்டத்தை புதிய அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.