ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் வசந்த காலம் - அமைச்சர் அதாஉல்லா
-ஜே.எம். வஸீர்-
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தும் சுவர்ணபுரவர விருதுவழங்சுகும் விழாவும் உள்ளுராட்சி தேசிய மாநாடும் இவ்வாண்டு பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏச் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியில் முதலாம் நிலைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கு விருதுகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாட்டில் காணப்படும் 338 உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரிவினைகளின்றி தீவின் எல்லாப்பாகங்களிலுமுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், துறைசார் உயர் அதிகாரிகள் அனைவரும் இன்றைய தினத்தில் சுதந்திரமாக ஒன்று கூடியுள்ளனர். இச்சூழலுக்கு வழி வகுத்த நமது நாட்டின் தலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு முதற்கண் நன்றி கூறுகின்றேன். இன்று நடைபெறும் உள்ளூராட்சி தேசிய மாநாடும் சுவர்ணபுரவர விருதுவழங்சுகும் விழாவும் அன்னாரின் பிரதம பங்கேற்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் கொடிய துயர்நீங்கி நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம். இதனை ஏற்படுத்தித் தந்தவர் நமது ஜனாதிபதி அவர்கள். நாம் இன்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களாக இவ்வமைதிச் சூழலில் வாழ்வதனை சகித்துக் கொள்ள முடியாத சில உள்நாட்டு, வெளிநாட்டு விஷமிகள் ஜனாதிபதி அவர்களை செயலிழக்கச் செய்து அதன் மூலம் சர்வதேசத்தின் ஊதுகுழலாக செயற்படுபவர்களை ஜனாதிபதியாக்க இன்று முழு சர்வதேசமும் மஹிந்த ராஜபக்ஷ என்ற எமது தேசம் மீது அன்பு கொண்டவரை வீழ்த்த வருந்துகட்டிக்கொண்டு செயற்படுகின்றது. அதன் முதற்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியம் எல்.ரி.ரி.ஈ மீதான தடையினை நீக்கியுள்ளது. எனவே, எமது நாட்டில் விடுதலைப்புலிகளால் பட்ட வேதனைகளும் துன்பங்களும் அந்தக் கொடிய நாட்கள் நமக்குத்தான் தெரியும். அது சர்வதேசத்திற்கு தெரியாது. எனவே மீண்டுமொரு இருண்டயுகம் நமது நாட்டை பீடிக்கவிடாது பாதுகாப்பது இலங்கையர் ஆகிய நம் ஒவ்வொருவரி;னதும். தார்மீகப் பொறுப்பாகும்;.
வளர்ச்சியடைந்து வரும் கிராமங்களின் தேவைகளுக்கேற்றவாறு அவைகளைச் சிறிய நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சிச் சபைகளின் முன் மொழிவுகளினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டன. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சுமார் 108 உள்ளூராட்சிப் பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு ' புற -நெகும' என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களாக கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் வெற்றிகண்டு வருகின்றன.
இன்னும் தங்களுடைய அன்றாட செலவினங்களுக்குக்கூட முகம்கொடுக்க முடியாதுள்ள பிரதேச சபைகள் இனங்காணப்பட்டு மாதத்திற்கு 10 இலட்சம் ரூபா வீதம் இவ்வருடத்தில் 12 மில்லியன் ரூபாய்களை அச்சபைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்றவாறு ஜனாதிபதி அவர்கள் முன்மொழிந்ததற்கேற்ப பிரதேச சபைகள் பணத்தினைப் பெற்றுக்கொள்கின்றன.மொத்தத்தில் ஜனாதிபதி அவர்களுடைய ஆட்சிக்காலம் உள்ளூராட்சி சபைகளின் வசந்த காலம் என்று உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதனை இங்கு சுட்டிக்காட்டுவதில் பெருமையடைகின்றேன்;.
இந்த
ReplyDeleteவசந்த காலம் யாருக்கு....?