'பேஸ்புக்கில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல' மஹிந்த ராஜபக்ஷ
நாட்டில் இடம்பெறும் நல்லவற்றைப் பாராட்டுவது அரசாங்கத்திற்குச் சாதகமாகிவிடும் என குறுகிய நோக்கில் ஊடகங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டில் நடப்பவற்றில் நல்லவற்றைக் குறைவாகவும் கெட்டவற்றை அதிகமாகவும் வெளியிடுவது ஊடகங்களின் வழங்கமாகிவிட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மட்டுமன்றி எப்போதும் ஊடகங்கள் அவ்வாறே செயற்பட்டுள்ளன என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் மன்ற அரங்கில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலிருந்து சிறுவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறுவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் திஸ்ஸ கரலியத்த, சுமேதா ஜயசேன, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, உலக சிறுவர் தினத்தையொட்டிய பிரதான தேசிய நிகழ்வு இன்று மஹரகமயில் நடைபெறுகின்றது. இதனைத் தவிர நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் சிறுவர் தினம் போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஐ.நா.வின் சிறுவர் உரிமை தொடர்பான சாசனத்திற்கிணங்கவே ஒக்டோபர் முத லாம் திகதி சிறுவர் தினம் அனுஷ்டிக் கப்பட்டு வருகிறது. நாம் சிறுவராக இருந்த காலத்தில் இந்த உரிமை சாசனம் நடைமுறையில் இருக்கவில்லை. அந்த வகையில் இன்றுள்ள சிறுவர்களாகிய நீங்கள் அதிஷ்டசாலிகள்.
வரலாற்றில் இலங்கையில் சிறந்த பழக்க வழக்கங்கள், விழுமியங்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. பெளத்த மதத்திற்கு 2600 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அக்காலம் தொட்டே நற்பண்புகளுக்கும் விழுமி யங்களுக்கும் முக்கியத்துவமளிக் கப்பட்டு பேணப்பட்டு வந்துள்ளன. இதற்கிணங்க பிள்ளைப்பாசம் பிள்ளைக ளுக்கான பாதுகாப்பு சிறந்த பராமரிப்புகள் இருந்து வந்துள்ளன. சிறுவர்களுக்கான சாசனம் போன்றே எமது விழுமியங்களும் பழக்க வழக்கங்களும் நற்குணங்களும் நடைமுறையில் இருந்துள்ளன.
கடந்த சுமார் 5 அல்லது ஆறு வருடங்களை நோக்கும் போது இத்தகைய நிகழ்வுகளை நடத்த முடியாத நிலையே நாட்டில் காணப்பட்டது. அதற்கான சுதந்திர சூழல் இருக்கவில்லை. அவ்வாறு சிறுவர் தினம் நடத்தினாலும் பிள்ளைகளை அதற்கு அழைக்க முடியாத நிலையே இருந்தது. அப்படியே அழைத்தாலும் அவர்களை பெற்றோர் அதற்கு அனுப்புவதற்கு யோசித்த காலமே அது சந்தேகம் பயம் மத்தியில் மக்கள் வாழ்ந்த யுகம் அது.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு பாடசாலை வாசலில் பெற்றோர் காத்திருந்த காலம் அது. வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் பலாத்காரமாக ஆயுத இயக்கத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சுதந்திரம் இருக்கவில்லை. யுத்தம் நிறைவுறும் போது சிறுவர் படையினர் 560 பேர் அரசாங்கத்துடம் சரணடைந்ததைக் குறிப்பிட வேண்டும்.
இவற்றைப் பார்க்கும் போது உண்மையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு. அவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அந்த சுதந்திரத்தின் சாயல் அமைதியின் வடிவம் சிறுவர்களின் முகத்தில் தற்போது பிரதிபலிக்கின்றது. சிறுவர்களுக்கு சுதந்திரமும் அவர்களது உரிமையும் முக்கியமானது. எமது நாட்டை மற்றும் நாட்டில் நடக்கும் நல்லவற்றை வெளியிடுவதன் மூலம் சிறுவர்களுக்குள் சிறந்த சிந்தனைகளைக் கட்டியெழுப்ப முடியும் என்பது எனது நம்பிக்கை. அவர்களின் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு இது வழிவகுக்கும்.
சிறுவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சிறந்த நாடு இலங்கை என்று சில அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன. இதங்கிணங்க இப்போது எமது நாட்டில் சிறுவர்களின் உரிமை மிக உச்ச அளவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. பிள்ளைகள் சமூகத்தோடு இணைவதை விட கனணிக்கு முன்பாக அமர்ந்திருப்ப தையே நல்லதென சில பெற்றோர்கள் கருதுகின்றனர். இதனால் ‘பேஸ்புக்’ மற்றும் சில இணையத்தளங்களில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல.
பிள்ளைகளுக்கான கல்வியை வழங்குதல், வறுமையை ஒழித்தல், சிசு மரணம் வீதம் குறைந்துள்ளமை போன்ற பத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கைப் பொறுத்தவரை இலங்கை முன்னணியில் திகழ்கிறது. கல்வித்துறை முரண்பாடுகள் நிவர்த்திக்கப்பட்டு நகரங்களைப் போன்றே கிராமங்களுக்கும் சமமான வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதன் பிரதிபலன்களை இப்போது கிராமங்களில் காண முடிகின்றது. இதன் மூலம் கிராமிய மட்ட பிள்ளைகள் சிறந்த பரீட்சை பெறுபேறுகளைப் பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, நாடளாவிய ரீதியில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி இதன்போது விருது வழங்கி கெளரவித்தார். சிறுவர் தினத்தையொட்டிய கொடியினை சிறுவர்கள் ஜனாதிபதிக்கு அணிவித்து கெளரவமளித்தனர். இத்தினத்திற்கான விசேட தபால் முத்திரை வெளியீடும், சிறப்பிதழ் வெளியீடும் இடம்பெற்றமை குறிப் பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று வைத்தால் 50 % வீத வாக்கு கிடைக்காது அமைச்சர்கள் புணனாய்வு உத்தியோக தர்கள் ஆலோ சணை இன்னொரு வருடம் தள்ளிப்போட்டால் என்ன...??
ReplyDeleteஆனால் .........
சாஸ்திரக்காரன் சொல்றானாம்... ..
.அப்ப்டி தள்ளிப் போட்டால் இன்னும் இன்னும் மோசாமாய் ..போகுமாம் .....
யாரு சொல்வதைக் நான் கேட்பது ...