''பாலியல் லஞ்சம்'' குறித்து ஆராய்ந்து வருகிறோம்
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இணைத்து கொள்ளும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அதுதொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடு இதுவரை பதிவாகவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்தி தகவல்களை சேகரித்து அது தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஏஸ்லி டி சில்வா கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை குழுவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, உதவி செயலாளர் ஹிரந்த பெரேரா, தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய ஆகியோர் உள்ளதாக அவர் கூறினார்.
Post a Comment