இலங்கை முஸ்லிம்களின் நெருக்கடிகள் குறித்து, ஐ. நா. கவனம் செலுத்தும் - ஜெனீவா முன்னாள் பிரதிநிதி
இலங்கை வெளிவிவகார சேவையை ஒரு குழு கட்டுப்படுத்தி வருவதாக ஜெனீவாவிற்கான முன்னாள் நிரந்தர இலங்கைப் பிரதிநிதியும், சிரேஸ்ட ராஜதந்திரியுமான தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர சேவையிலிருந்து தாம் விலகிக்கொள்வதற்கு அல்லது விலக்கப்படுவதற்கு தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்னவும், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாரளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுமே காரணம் என தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார சேவையை ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அவர்கள் தேசத்தின் நலன்களையும் கொள்கைகளையும் கருத்திற் கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழுவின் விருப்பு வெறுப்புக்களக்கு இயைபொத்து போகாத ராஜதந்திரிகள் அதிகாரிகள் பதவிகளிலிருந்து தூக்கி எறியப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, தொழில்சார் ராஜதந்திரிகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சஜின் வாஸ் - கிறிஸ் நோனீஸ் சம்பவத்தின் ஊடாக நாட்டுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களின் மூலம் நாட்டின் அரச பொறிமுறைமை இயங்குவதில்லை என்பதே அர்த்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றிய செனுகா செனவிரட்னவிற்கு பதிலாக தம்மை அரசாங்கம் நியமித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளமை குறித்து செனுகாவிற்கு தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும், அது பற்றிய தகவல்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றப்படுவது தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சிடம் ஆலோசனை கோரியிருந்தாகவும், அதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வர அனுமதியளிக்குமாறு தாம் கோரியதாகவும் அதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சுய விருப்ப அடிப்படையில் தாம் இலங்கைக்கு வந்ததாகவும், அதற்கு சஜின்வாஸூம், வெளிவிவகார அமைச்சரும் தம்மை கடுமையாக கடிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்திரப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனமொன்றறே நிர்மானித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செனுகா செனவிரட்ன பதவி வகித்த காலத்தில், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அமைக்கும் பணிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் தரப்பினரிடம் இவ்வாறான பொறுப்பினை ஒப்படைக்கப்பட்டது ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிர்மானப்பணிகளின் போது கண்ணுக்குத் தெரியாத வகையில் கமராக்களோ அல்லது மைக் வகைகளோ வைக்கப்பட்டிருந்தால், உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுக்களையும்அவர்களினால் ஒட்டுக் கேட்க முடிந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் உண்மையில் ஓர் நிதி நிறுவனம் எனவும், ஜெனிவாவில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் நிறுவனம் அமைந்துள்ளது எனவும்அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தாம் பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் இல்ல நிர்மானம் குறித்த கணக்காய்வு மற்றும் பாதுகாப்பு விபரங்களை கோரியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் பிரதானி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் சிறை அடைக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அநீதிகள் பிழைகள் இடம்பெறும் போது வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்தால் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும், கேள்விகள் எழுப்பினால் அவர்கள் பணியிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெளிவிவகார சேவை பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களை அரசாங்கத்தினால் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என விசாரணை முடிவில் நிறுவப்படும் எனவும், எதிர்காலத்தில் கிரமமான முறையில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் உள்நாட்டு ரீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரியதாகவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக நல்லிக்கத்தை ஏற்படுத்துமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் உரிய பதில் அளிக்காத காரணத்தினால் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா கிரமமான முறையில் இலங்கை விவகாரங்களில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் தற்போதும் மக்களை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளது என்ற வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்என அவர் எதிர்வு கூறியுள்ளார்.
குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறித்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதினைந்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள்அமைப்பில் கடயைமாற்றிய காரணத்தினால் தமக்கு, அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து அனுபவம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். Gtn
Post a Comment