ஜாதிக்க ஹெல உறுமயவிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி மஹிந்த..?
(Gtn)
ஜாதிக ஹெல உறுமயவுடனா சந்திப்பின்போது அவர்கள் முன்வைத்த கருத்துக்களால் சீற்றமடைந்த ஜனாதிபதி அந்த கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தின் போது ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தை கடுமையாக விமர்சித்ததாகவும் தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஜாதிக ஹெல உறுமயவுடனா அரச தரப்பின் சந்திப்பின் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச சீற்றமடைந்து தனது ஆசனத்திலிருந்து எழுந்தார்- நான் வேறு சிலரை சந்திக்க வேண்டியுள்ளது என தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்-
அவ்வாறு அங்கிருந்து வெளியேறும்போது ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரரை பார்த்து நானும் நீங்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துவிட்டு- ஜனாதிபதியை தோற்கடிக்கப் போவதாக தேரர் தெரிவித்துள்ளமை குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.
ஜனாதிபதி மாத்தறையின் கம்புறுபிட்டியவில் உள்ள பலட்டுவயில் பிறந்தவர்-தேரரின் அத்துரலிய இதற்க்கு அடுத்த கிராமம் -இதனையே ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சென்ற பின்னரும் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் பசில்ராஜபக்சவுடனும்,வேறு சிலருடனும் பேச்சுக்களை தொடர்ந்தனர். ஜாதிக ஹெல உறுமயவின் யோசனைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்து ஆராய்வதாக பசில் தெரிவித்தார்-இந்த சந்திப்பு குறித்து திருப்தியடையாதவர்களாக ஜாதிகஹெல உறுமயவினர் வெளியேறினர்.
குறிப்பாக ஜனாதிபதி இடைநடுவில் வெளியேறியது குறித்து அவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டனர்- தங்களை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே தேரரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் அவ்வாறு நடந்துகொண்டதற்காக மன்னிப்பு கோரினார். ஜாதிஹ ஹெலஉறுமய தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த பௌத்த மதகுருமாரை அவமதிக்கும் எண்ணத்தில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
இதேவளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆளும்கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைஜாதிக ஹெல உறுமய ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.இது தொடர்பாக ஏனைய பௌத்த அமைப்புகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டுவிட்டு விரைவில் முடிவை அறிவிப்போம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment