யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மாணவர்களிடையே அறிவுசார் போட்டி
(FAROOK SIHAN)
யாழ் மாவட்டத்தின் இளம் சமூகத்தின் இஸ்லாமிய கல்வி முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்காக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளின் அறிவு சார் போட்டி நிகழ்வின் தெரிவுப்போட்டிகள் நேற்று (4) பெரிய பள்ளிவாசலில் (காட்டுப்பள்ளி) நடைபெற்றது.
இதில் சுமார் நான்கிற்கு மேற்பட்ட மத்ரஸாக்களின் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குர்ஆன் மனனம்,துஆக்கள்,சிறிய ஹதீஸ்,தர்ஜமா,பேச்சு,கவிதை, மற்றும் இஸ்லாமிய கீதம் உள்ளிட்ட விசேட நிகழ்வுகளில் பங்கு பற்றி தங்கள் திறமைகளை இம்மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 6 வயதுடைய என்.நுகா எனும் மாணவி சிறப்பாக தனது திறமைகளை வெளிப்படுத்தி நடுவர்கள்,பார்வையாளர்களின் கவனர்த்தை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டார். இவரை போன்று ஏனைய மாணவர்களும் தத்தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பல்வேறு வயது மட்டங்களில் நடைபெற்ற இப்போட்டிகள் தொடர்ந்தும் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரையும் இணைத்து பெருநாள் தினத்தன்று நடைபெறவுள்ளது. தொடர்ந்தும் பெருநாள் தினமன்று ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வுகள் இஸ்லாமிய மார்க்க அனுஸ்டானத்தை பின்பற்றி நடைபெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்வானது யாழ் மண்ணில் மீள்குடியேறி வரும் முஸ்லீம் மக்களின் ஆன்மீகத்துறையிலும்,மார்க்க விடயத்திலும் வளர்ச்சி கண்டு வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்தெரிவு நிகழ்ச்சி நடைபெற்ற போது நடுவர்களாக எ.அஸிஸ்,எம்.ஜவ்சான்,எம்.ஐ மஹ்மூத்,எம்.அஸ்காத்,எல்.காமில்,ஐ.அப்துல் கையும்,எம் ஹலீபா,எம்.எம் இர்பான்,ஏ.எம் றழீம்,எம்.முஜாஹித்,எப்.எம் பறூஸ் உள்ளிட்ட மௌலவிகள் கலந்து கொண்டனர். சம்மேளனத்தின் சார்பாக அதன் தலைவர் எ.எச் ஜமால் முகைதின்,செயலாளர் ஆர்.கே.சுவர்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment