Header Ads



பொதுபல சேனாவின் விசேட படைப்பிரிவு..?


(GTN)

பொதுபலசேனாவின் முகப்புத்தகத்தில் ஞானசாரதேரர் கறுப்புடையணிந்தவர்களுடன் நிற்க்கும் புகைப்படம் காணப்படுகின்றது.

இது ராஜபக்சாக்களினதும், பொதுபல சேனாவினதும் விசேட படைப்பிரிவினரா..? நாங்கள் எதிர்வரும் தேர்தல்களின் போது இவர்கள் சிறுபான்மை இனத்தவர்களையும், எதிர்க் கட்சியினரையும் தாக்குவதை காணப்போகின்றோமா..?

பொதுபலசேனா புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்க்கும், நாட்டின் பெயரை மாற்றுவதற்க்கும், திட்டமிட்டுள்ளது. இந்த நாட்டிற்க்கு சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கும் புதிய அரசமைப்பு அவசியமாகவுள்ளது என பொதுபலசேனா தெரிவித்துள்ளது. 

தேர்தலின் போது மக்களின் கவனத்தை முக்கிய விடயங்களிலிருந்து திசைதிருப்புவதற்க்கு இதைவிட வேறுவிடயமிருக்க முடியாது.

ஞானசாரதேரர்- சோபித தேரர் குறித்து பொதுபலசேனா மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளார். பௌத்த எழுச்சியை அழிக்க நினைக்கும் அரசசார்பற்ற அமைப்புகள் சோபித தேரரின் பின்னாலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சாக்கள் நிறைவேற்று  ஜனாதிபதி முறைக்கு எதிராகவுள்ள பொதுவேட்பாளர் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்- இதனை தடுத்து நிறுத்தும் பணியை பொதுபலசெனா செய்கின்றது.

இந்து தமிழர்கள்- கிறிஸ்தவ தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவும்,முஸ்லீம் தமிழ் மோதல்களை  உருவாக்கவும் பொதுபலசேனா முயல்கிறது.

இதைவிட பொதுபலசேனா மிகவும் ஆபத்தான இன்னொரு செயலையும் செய்கிறது - அடுத்த தலைமுறையின் மனதில் விஷத்தை ஏற்றுவதே அது- இது ராஜபக்சாக்களின் பரம்பரை அரசியலுக்கு அவசியமாகவுள்ளது- நாட்டிற்க்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ளது.

2

சஜின் - நோனிஸ் மோதல் ராஜபக்ச அரசாங்கத்தின் வன் முறை வாழ்க்கைமுறையையும் பிரதிபலிக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சஜினால் தூதுவரை பலரின் முன்னிலையில் தாக்கமுடிந்தது என்றால் அதற்க்கு காரணம்- தான் அவ்வாறு நடந்துகொண்டாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என சஜினிற்க்கு  தெரிந்திருந்ததே.

ராஜபக்சாக்களின் உலகில் ஒரேயொரு பாரிய குற்றம்மாத்திரமேயுள்ளது- அது விசுவாசமின்மை-அல்லது ராஜபக்சாக்களை எதிர்ப்பது. அதுவே அவர்களை பொறுத்தவரை குற்றச்செயலாகும்-அவாகளால் மன்னிக்க முடியாத விடயமும் அதுவே.

ஏனைய குற்றங்கள் அனைத்தையும்,குற்றவாளிகள் தங்களுடைய விசுவாசிகளாக இருந்தால் ராஜபக்சாக்கள் மன்னிக்க தயாராகவுள்ளார்கள்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காணப்பட்டால் மாத்திரமே சில சமயங்களில் அவர்கள் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்க தயாராகவுள்ளனர்.

இதேபோன்று பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் செயற்பட்டுள்ள விதமும் ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் தப்பிப்பிழைத்து உயிர் வாழ்வதற்க்கு என்ன அவசியம் என்பதை புலப்படுத்தியுள்ளது.

சுயகௌரவம் உள்ள எவரும் இவ்வாறான அவமரியாதைக்கு பின்னர் தொடர்ந்து பதவியில் நிலைத்திருக்க மாட்டார்கள். நோனிஸ் முதலில் பதவி விலகியதாகவும், பின்னா அதனை வாபஸ் பெற்றதாகவும் தெரியவருகிறது. தனதுபதவியும், கௌரவமும் பெரிது என கருதியதால் அவர் சகிக்கமுடியாத அவமானத்தை சகித்துக்கொள்ள துணிந்தரா? அல்லது தான் பதவிவிலகுவதன் மூலமாக ராஜபக்சாக்களின் சீற்றத்திற்க்குள்ளாக நேரிடும் என அவர் அஞ்சினாரா?

தன்னால் தெரிவுசெய்யப்பட்ட இராஜதந்திரி மீதான தாக்குதலையே விசாரிப்பதற்க்கு தயாரில்லதா ராஜபக்ச நாலாம் ஈழப்போரின் போது பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விசாரிக்கமாட்டார், அதேபோன்று தன்னுடைய குடும்பத்தவர்களால் இழைக்கப்பட்ட அரசியல் குற்றங்களையும் அவர் விசாரிக்கமாட்டார்.

நோனிசினால் ராஜபக்சாக்களிடமிருந்து நீதியை பெற முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களுக்கு நீதி குறித்து என்ன நம்பிக்கையுள்ளது.

வாஸ் குணவர்த்தனா, சஜினின் சம்பவத்தை ஜனாதிபதி கையாண்ட விதம் சர்வதேச அழுத்தம் இல்லாமல் இலங்கையில் சிறிய நீதி கூட சாத்தியமில்லை என்பதை புலப்படுத்தியுள்ளது.

மனச்சாட்சி மற்றும் வெட்க உணர்வும், ஏனையவர்களின் உரிமைகளை மதிக்கும் தன்மையும் இல்லாமல் போனால் மனிதகுலம் அழிந்துபோகும் என்கிறார் பிளாட்டோ. ராஜபக்சவின் இலங்கை அவ்வாறான ஒரு நாடா மாறிவருகிறது.

No comments

Powered by Blogger.