Header Ads



பல கோடிகளுக்கு விலை பேசப்படும் சிறுபான்மை கட்சிகள்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறிய கட்சிகளையும் விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு சிறிய கட்சிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்க உள்நாட்டு, வெளிநாட்டு கோடீஸ்வர வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களும் பணம் செலவழிக்க முன்வந்துள்ளனர்.

இதற்காக ஆளும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் பணத்தை வாரி இறைக்க தாயாராகி வருவதாகவும், பாரியளவில் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும் எனவும் சிங்கள பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்ககைகளில் பல்தேசிய நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.