ரவூப் ஹக்கீமுக்கு எதிராக சதி - ஆளுந்தரப்புடன் இணைந்து சிரேஷ்ட உறுப்பினர் துரோகம்...!
(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் அந்தக் கட்சியின் தலைமைக்கும் மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. விசேடமாக, அமைச்சர் ரவுப் ஹக்கீமை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தனது முழு எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ள அவர், அவ்வாறு ஹக்கீம் போட்டியிட்டால் தனிப்பட்ட அவரது வாழ்க்கை தொடர்பில் பல விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் போட்டியிடும் போது முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆசன எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற நோக்கிலேயே அவர் இதனைத் தடுக்கும் வகையில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விசேடமாக, குமாரி குரே விவகாரம் தொடர்பில் இதுவரை வெளிவராத தகவல்கள் தன்னிடம் உள்ளதாக இந்த சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட முயற்சித்தால் அந்த விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை பிளக்மெயில் செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்திய குமாரி குரேயின் உறவு முறையான பெண் ஒருவருடன் அண்மையில் கலந்துரையாடியுள்ள இந்த சிரேஷ்ட உறுப்பினர், ஹக்கீமுக்கு எதிராக சில தகவல்களையும் வழங்குமாறும் புதிதான ஒரு நாடகத்துக்கு கதாநாயகியாக வேடம் போடுமாறும் அந்தப் பெண்ணிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அதற்கான பணப் பேரம் பேசலும் தற்போது இடம்பெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை இல்லாமல் செய்ய தன்னால் முடியுமென குறித்த சிரேஷ்ட உறுப்பினர் ஆளுந்தரப்புக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவே இவ்வாறு செயற்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் அமைச்சர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் போது தற்போது முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளிருந்தே அரசுக்கு ஆதரவு வழங்கும் சிலர் தோல்வியைத் தழுவி விடலாமென குறித்த சிரேஷ்ட உறுப்பினர் சந்தேகம் கொள்வதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் தானும் அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்ளவர்களும் செல்லாக் காசாகி அரசினாலும் ஓரங்கட்டப்படலாமென்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் எனக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து சற்று நேரத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட அரசியல் பீட உறுப்பினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு நேரடியாகவே விடயத்தைக் கூறி கேட்டபோது, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் என பதிலளித்தார்...!
Who is the munaafik [Thevadiya paiyan ]
ReplyDelete