''75 லட்சம் ரூபா மோசடி'' - ஞானசாரரின் நெருங்கிய சகா கைது
பொதுபல சேனா அமைப்பின் நிதிச் செயலாளரான வெல்லம்பிட்டியே சுமணதம்ம தேரர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
75 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நெருங்கிய சகாவான சுமணதம்ம தேரர் மீது அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமணதம்ம தேரர் பேலியகொடவில் உள்ள வீடொன்றில் ஒழிந்திருந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மோசடியாக காணியை விற்ற பிக்கு கைது
பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேசத்தில் விகாரைக்கு சொந்தமான காணி ஒன்றை மோசடியான முறையில் 70 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விகாரையின் விகாரதிபதியே நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
விகாரை தேவாலகம் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அவர் இந்த காணியை விற்பனை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட விகாரதிபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment