Header Ads



வயிற்றுக்குள் 70 ஆயிரம் டாலர்

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி அங்குள்ள விமான நிலையங்களில் போதை பொருள் தடுப்பு படையினர் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள சுற்றுலா மையமான புந்தாகானா விமான நிலையத்தில் பயணிகளிடம் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும் நிலையில் இருந்த பெண் பயணியை தனியாக அழைத்து சென்று ‘ஸ்கேன்’ செய்து பார்த்தனர்.

அப்போது வயிற்றுக்குள் ரூ.45 லட்சம் (70 ஆயிரம் அமெரிக்க டாலர்) பணம் இருந்தது. அவை 10 கேப்சூல்களில் அடைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்டது.

அவை தவிர சூட்கேசில் மறைத்து வைத்திருந்த ரூ.43 லட்சம் பணமும் இருந்தது. எனவே அவரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வயிற்றுக்குள் வைத்து நூதன முறையில் பணம் கடத்திய பெண்ணின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபோன்று பணம் கடத்திய நபரை தற்போதுதான் கைது செய்து இருப்பதாக வியப்புடன் கூறினர்.

No comments

Powered by Blogger.