சுதந்திர கட்சியின் 5 அமைச்சர்கள் என்னுடன் இணைந்து, அரசிலிருந்து விலகுவார் - அத்துரலிய ரத்ன தேரர்
ஜாதிக ஹெல உறுமய முன்வைக்கும் அரசமைப்பு சீர்திருத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், சிறிலங்கா சுதந்திரகட்சியின் முக்கிய அமைச்சர்களுடன் பிரிந்து செல்லப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய தனது அரசமைப்பு சீர்திருத்த யோசனைகளை 14 ம் திகதி கொழும்பில் வெளியிடவுள்ளது.
எனினும் அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குமா என்பது குறித்து தனக்கு சந்தேகம் நிலவுதாக தேரர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டிற்க்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க கூடிய இந்த யோசனைகளை தயாரித்துள்ளோம்.
நாங்கள் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்தவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம், எங்கள் யோசனைகள் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தக்கூடியவை.
அரசாங்கம் இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்திற்க்குள் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 5 அமைச்சர்கள் என்னுடன் இணைந்து அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment