மகிந்த 3ஆவது தடவையாக தேர்தலில் போட்டியிட தடுப்பதற்கான போராட்டங்களுக்கு ஆதரவு - சஜித் பிரேமதாச
-Gtn-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வந்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடுவதை தடுப்பதற்க்கு மக்கள் போராட்டங்கள் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அதற்கு தனது ஆதரவுண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது முந்திய ஆட்சிக்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை ப+ர்;த்தி செய்யாதவர்களை மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க அனுமதிப்பது பயனற்ற விடயம் என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் தெரிவித்ததை சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அரசமைப்பு 27 தடவைகள் மாற்றப்பட்டுள்ளது, அந்த மாற்றங்கள் ஜனநாயகத்தையும், மக்களின் அதிகாரத்தையும் அதிகரிப்பதற்காகவே இடம்பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிட முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது, சில அரசியல் அமைப்பு நிபுணர்கள் அவர் போட்டியிட முடியாது, அரசமைப்பின் 18 வது திருத்தம் முந்திய காலப்பகுதிக்கு செல்லாது என தெரிவிக்கின்றனர்.
நீதித்துறையிடம் இது குறித்து ஆலோசனை கேட்பதும் பயனற்ற விடயம், முன்னாள் பிரதம நீதீயரசர் விடயத்தில் இடம்பெற்றதை அடிப்படையாக வைத்தே இந்த முடிவிற்க்கு வரவேண்டியுள்ளது.
ஆகவே தற்போதைய அரசாங்கம் அரசியல்அமைப்பை மீறுவதை தடுப்பதற்க்கு மக்கள் போராட்டமே ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment