அவுஸ்திரேலியாவிலிருந்து 20.000 மாடுகள் இலங்கை வருகின்றன
இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் அவுஸ்திரேலிய கால்நடை நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்கொட் பேரெட்வேட் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்துக்கிணங்கவே அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
2012ஆம் ஆண்டில் உயர் ரக 2000 கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவை விவசாயிகளிடையே சிறந்த பயனை தந்துள்ளன. எனவே தான் மீண்டும் அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 கறவை பசுக்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இங்கு நாலு கால் மாடுகளுடன் சேர்த்து இரண்டு கால் மாடுகளும் தாரளமாக இருக்கும் பொது இன்னும் எதற்கும் மாடுகள்...ஹஹா..!
ReplyDeleteஞான சாரரிடம் 20 மாட்டை வளர்க்கக் கொடுத்தால் நாடு ஓரளவுக்கு வலம் பெறும். (சட்ட ரீதியான) மனைவியும் இல்லை குழந்தைகளும் இல்லை. குடும்பமும் இல்லை. எனவே தான் பைத்தியம் பிடித்தவனாக எல்லாவற்றிலும் மூக்கைப் போட்டு சீரழிகிறான். பாவம். மாட்டையாவது வளர்த்தால் அதற்கே நேரம் போயிடும். மாட்டுப் புத்தியாவது வரட்டுமே.
ReplyDelete