Header Ads



ரணில் 100 தடவைகளும் போட்டியிடலாம், வெற்றியீட்டும் மஹிந்தவிற்கு மூன்றாவது தடவை போட்டியிட முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு எதிராக வழக்குத் தொடருமாறு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஜே.வி.பி கட்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்றால் ஒவ்வொறு இடங்களுக்கு சென்று கருத்தரங்கு நடாத்துவதனை விடவும், உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

கொழும்பு மருதானையில் அடுக்கு மாடி குடியிருப்பு அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து சிலர் பீதியடைந்துள்ளனர்.

ஜனாதிபதி மூன்றாம் தடவைக்காக போட்டியிட முடியாது. சட்டவிரோதமானது என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியினால் மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா என உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோர முடியும்.

மாறாக வீதிகளில் கூட்டங்களில் நடத்தி ஜனாதிபதி போட்டியிட முடியாத என்பதில் அர்த்தமில்லை.

ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டாலும் வெற்றியீட்டுவார் என தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறு போலியாக சட்ட தர்க்கமொன்றை முன்வைக்கின்றார்கள்.

சந்திரிகா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

சந்திரிகா பொது வேட்பாளராக போட்டியிட்டால் தவறில்லை. எனினும் ஜனாதிபதி போட்டியிடக் கூடாது.

ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மேற்குலக நாடுகளைக் கொண்டு அறிக்கைகளை வெளியிட சிலர் முயற்சிக்கின்றனர்.

தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. மஹிந்த மூன்றாம் தடவைக்காக போட்டியிட முடியாது என மேற்குலக நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.

நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளும் நோக்கில் சட்ட தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.உண்மையில் சட்ட தர்க்கங்கள் மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காகவே முன்வைக்கப்படுகின்றன.

தோல்வியடையும் ரணில் விக்ரமசிங்க நூறு தடவைகளும் போட்டியிடலாம், வெற்றியீட்டும் மஹிந்தவிற்கு மூன்றாவது தடவையான போட்யிட முடியாது என்பது எந்த வகையில் நியாயமாகும் என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. double acting king.cant run longtime.
    time limit very soon for you

    ReplyDelete

Powered by Blogger.