ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாஸவும் விருப்பமின்றி திருமணம் செய்துள்ளனர் - JVP
ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஒன்றுபட்டமை என்பது, விருப்பமில்லாமல் செய்து வைத்த திருமணத்தைப் போன்றது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கூட விருப்பமின்றியே சமூகமளித்திருந்தனர் என ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ரணிலின் நோக்கம் வேறு, சஜித் பிரேமதாஸவின் நோக்கம் வேறு. எனினும், சஜித்தை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு முன்னுக்குச் செல்ல வேண்டும் என ரணில் விரும்புகின்றார்.
ரணிலை எப்படியாவது தோல்வியடையச் செய்து அதிகாரத்தைக் கையில் எடுப்பது சஜித்தின் முனைப்பாகவுள்ளது. இருவருடைய நோக்கங்களும் நேரெதிரானவை. இதனால், தலைவர்கள் கைபிடிப்பதனால் மாத்திரம் கட்சிக்குள் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
எமது பிரச்சினை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள சமாதானமல்ல. ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கும் பொருளாதார கொள்கையை தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதனால், அரசாங்கத்தை வெல்லும் பிரச்சினைக்கு அவர்களால் தீர்வு வழங்க முடியும் என நாம் கருதவில்லை. சிறந்த மாற்று பொருளாதார கொள்கை இல்லாதவர்களுடன் கூட்டுச் சேர்வது சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment