தேர்தல் செயலகத்தை முற்றுகையிடுவோம் - JVP எச்சரிக்கை
அரசையும் அரசியல் கட்சியையும் வேறுப்படுத்தி நாட்டில் சாதாரண தேர்தலை நடத்த வழிவகைகளை செய்யாவிடின் தேர்தல் செயலகத்தை முற்றுகையிடுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால் காந்த எச்சரித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசியக்கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான நிலைப்பாட்டையும் மாற்றியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் கருத்தரங்கு பொது நூலகத்தில் இடம் பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் தேர்தல் முக்கிய வகிபாகங்களை வகிக்கின்றது. எமது நாட்டில் தேர்தல் நீதியானதாகவும் நேர்மையானதாக நடத்தப்படுவதில்லை.
நாட்டில் தேர்தல் நீதியான நடத்தப்பட வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்குவதுடன், அதனை செயற்படுத்தவும் தேர்தல் ஆணையாளர் காத்திரமாக செயற்பட வேண்டும். இது தற்போதைய ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு மாத்திரம் விதிவிலக்கல்ல. இதற்கு முன்பு வரக்கூடிய தேர்தல் ஆணையாளர்களுக்கும் இது பொறுந்தும்.
நாட்டில் தேர்தலுக்கு சட்டமொன்று காணப்படுகின்றது. அதனை செயற்படுத்துவதற்கான சுயாதீன உரிமை தேர்தல் ஆணையாளருக்கு உண்டு.
இதற்கமைய அரசு வேறு அரசியல் கட்சிகள் அரசில் அங்கம் வகிப்பவையாகும். ஆகையால் கட்சிகளின் உத்தரவை தேர்தல் ஆணையாளர் செயற்படுத்த வேண்டியதில்லை. எனவே அரசும் அரசியல் கட்சிகளுக்குமிடையிலேயே வேறுபாடுகள் உள்ளன.
Post a Comment