ISIS குறித்து முஸ்லிம் நாடுகளுடன், அமெரிக்கா ஆலோசனை..!
ஈராக் நாட்டில் சில பகுதிகளையும், சிரியாவின் சில பகுதிகளையும் பிடித்து "இஸ்லாமிய நாடு" என பெயரிட்டு தனி அரசாங்கம் நடத்தி வரும் ஐ.எஸ் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்கள் மீது தாக்குதல் தொடருமானால் தொடர்ந்து அமெரிக்கர்களும் கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கத் தொடங்கியுள்ள ஐ.எஸ். குறித்து, அரபு நாடுகள் கூட்டமைப்பின் தலைவரான நிபி அல் அராபியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி ஆலோசனை நடத்தினார். இன்று மாலை கெய்ரோவில் நடைபெறும் அரபு நாடுகளின் கூட்டத்திற்கு முன்னதாக இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பின் போது மீதுஎடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக அரபு நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று கெர்ரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து ஐ.எஸ். வாதிகளுடன் இணைய வருபவர்களையும், அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கவும் எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று இரு தலைவர்களும் விவாதித்தாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment