அமெரிக்காவின் இலக்கு ISIS அல்ல, கொரசான் எனும் புதிய இயக்கம்...!
(Kalaiyarasan Tha)
அமெரிக்கா, கடந்த சில நாட்களாக, "இசிஸ் எதிர்ப்பு புனிதப் போரில்" கலந்து கொள்ள வருமாறு பல உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது. உண்மையில், அமெரிக்காவின் இலக்கு இசிஸ் அழிப்பு அல்ல. இசிஸ் இயக்கத்தை வேட்டையாடும் சாட்டில், சிரியாவிற்குள் யுத்தத்தை கொண்டு செல்லவுள்ளது. அதனால் தான், அமெரிக்காவின் புனிதப் போரில் பங்குபற்ற ஈரான் மறுத்துள்ளது.
இதற்கிடையே, "இசிஸ் இயக்கத்தினால் அமெரிக்காவிற்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை. இசிஸ் எந்தளவு கொடூரமான இயக்கமாக இருந்தாலும், கொரசான் எனும் புதிய இயக்கம் அதை விட மிகவும் கொடூரமானது என்று அறிவித்துள்ளது. (அப்பாடா! சிரியாவுக்குள் போரிட இன்னொரு காரணம் கிடைத்து விட்டது.)
கொரசான் இயக்கத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாட்டவர்கள் பெருமளவில் உள்ளனராம். அது சிரியாவில் தளம் அமைத்திருந்தாலும், அதன் நோக்கம் சிரிய அரசை எதிர்த்துப் போராடுவது இல்லையாம். அதாவது, கொரசான் இயக்கமானது, அமெரிக்கா, அல்லது மேற்குலக\நாடுகளில் தாக்குதல்கள் நடத்துவதை நோக்கமாக கொண்டதாம். அனேகமாக, வெகு விரைவில் 9/11 பாணியிலான தாக்குதல் ஒன்று நடக்கலாம். அதற்கு கொரசான் இயக்கம் உரிமை கோரலாம்.
கொரசான் என்பது, ஈரானுக்கு அரேபியர் சூட்டிய பண்டைய காலப் பெயர் ஆகும். இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில், ஈரானின் கிழக்குப் பகுதியும், ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியும், கொரசான் என்ற பெயரில் தனி மாகாணமாக இருந்தது. இன்றைய ஈரானில் கிழக்கு மாகாணம் ஒன்று, கொரசான் என்ற பெயரிலேயே அழைக்கப் படுகின்றது.
கொரசான் என்ற சொல்லுக்கு, இதயம் என்றும் இன்னொரு அர்த்தம் உண்டு. அரபியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் கொரசான் என்றே பயன்படுத்தப் படுகின்றது. உண்மையில் அது ஒரு இந்தோ ஐரோப்பிய சொல்லான கெர்ட் என்பதில் இருந்து வந்தது. (கிரேக்கத்தில் "கார்டியா", ஆங்கிலத்தில் "Heart")
Post a Comment