ISIS ஆபத்தானது - சூரிச்சில் முஸ்லிம் தலைவரான இமாம் சகிப் ஹலொலொவிக்
இஸ்லாமிய அரசு (Islamic State) என்பது முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடியது என்று சூரிச்சில் உள்ள முஸ்லிம் தலைவரான இமாம் சகிப் ஹலொலொவிக் கருத்து தெரிவித்துள்ளார்.
சுவிஸில் உள்ள இமாம் சகிப் இதுபற்றி கூறுகையில், நாங்கள் அனைத்து வகையான வன்முறையையும் எதிர்க்கிறோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய பெயரில் நடக்கும் வன்முறை செயல்களை முற்றிலுமாக எதிர்க்கிறோம்.
நாங்கள் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் மட்டுமில்லாமல் மனிதர்கள் என்ற அடிப்படையிலும் இஸ்லாமிய அரசு என்ற எண்ணத்திற்கு எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
இது மதங்களுக்கு எதிராக செயல்படும் அமைப்பு என்பதோடு, அவர்கள் குறிப்பாக இஸ்லாமியத்திற்கு எதிரானவர்களாக செயல்படுகின்றனர்.
இந்த இஸ்லாமிய அரசு என்ற திட்டம் எந்த இஸ்லாமிய அமைப்புகளின் தயாரிப்பும் அல்ல. மேலும் இதன் செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
சுவிஸ், போஸ்னியா, துருக்கியில் உள்ள எந்த அமைப்பும் இஸ்லாமிய அரசு உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை.
மேலும், அவர்களின் செயல்கள் எங்களுக்கு அவமானத்தை சேர்ப்பதோடு, எங்கள் மீதுள்ள நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment