இஸ்லாத்துக்கும் ISIS க்கும் எந்த தொடர்பும் இல்லை - பிரான்ஸ் முஸ்லிம்கள்
பிரான்ஸ் நாட்டின் நேஷனல் டேயில் அந்நாட்டு முஸ்லிம்கள் ஈராக்கில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நபிகள் காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் சம உரிமையுடனேயே வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாமும் அதைத்தான் போதிக்கிறது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு இதற்கு நேர் மாறாக கிறித்தவ சிறுபான்மையினரை கொல்கிறது. அவர்களை நாடு கடத்துகிறது. இதற்கு எதிராக .ஃபிரான்ஸ் மசூதிகளில் இமாம்கள் வெள்ளிக் கிழமைகளில் உரை நிகழ்த்த வேண்டும். இளைஞர்கள் தவறான வழியை தேர்ந்தெடுப்பதிலிருந்து காக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு வரும் வாரங்களிலிருந்து தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரத்தை துவங்க இருப்பதாக தலில் அபுபுக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் பலர் சிரியாவிலும் ஈராக்கிலும் போரிட ஃபிரான்ஸிலிருந்து செல்வது அதிகரித்துள்ளதையும் நாம் நோக்க வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே உலக அளவில் இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டம் என்ற நோக்கில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.
பாலஸ்தீன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அங்கு சென்று போராடாமல் ஓடி ஒளிந்த கோழைகள்தான் இந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர். அரபுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தீவிரவாத கும்பல் தங்கள் இயக்கத்துக்கு அரபியில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் வைத்திருப்பதில் இருந்தே யூதர்களின் கைவரிசையை புரிந்து கொள்ளலாம். தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
09-09-2014
சுவனப் பிரியன்
Post a Comment