ISIS என்ற புற்றுநோயை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈராக் பிரதமர்
ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகள் ஈராக்கின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இஸ்லாம் அரசு என அறிவித்துக் கொண்டனர். ஈராக்கின் குர்திஷ் படையினர் இழந்த பகுதிகளை மீட்பதற்காக அமெரிக்காவின் உதவியுடன் போராடி வருகின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹெர்ரி ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த இன்று பாத்தாத் சென்று உள்ளார். இது குறித்து ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபடி கூறியதாவது:-
ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகளுக்கு எதிராக போரிட சர்வதேச சமூகம் ஈராக்கிற்கு உதவ வேண்டும். இந்த புற்று நோயை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் எங்கள் பங்கு நாட்டை காப்பது. ஈராக் நாட்டையும், ஈராக்கியர்களையும் காப்பதில் சர்வதேச சமூகத்திற்கு பங்கு உள்ளது. திடீர் பயணமாக பாக்தாத் வந்து உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவதிகள் அச்சுறுத்தலில் இருந்து சிரியாவை காப்பாது ஐநா.வின் சர்வதேச சமூகத்தின் கடமையாகும் என்று கூறினார்.
Post a Comment