ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியை மீறிவிட்டார் - உதய கம்மன்பில
ஹரின் பெர்னாண்டோ அளித்த வாக்குறுதியை மீறியதால் தான் பதவி விலகுவதில்லை என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில பதவி விலகுவாரா? இல்லையா? என்பதை அறிவிக்கும் விசேட ஊடகவியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
ஹரின் பெர்னாண்டோ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெறும் பட்சத்தில் தான் அமைச்சர் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்தேன். இதன்போது மற்றுமொரு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதாவது தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் இல்லாமல் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெரும் பட்சத்திலேயே தான் பதவி விலகுவதாக அறிவித்தேன்.
என்றாலும் ஹரின் பெர்னாண்டோ நிபந்தனைகளை மீறி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். இதன் காரணமாகவே ஹரின் பெர்னாண்டோ 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் எனத் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் அமைச்சர் உதய கம்மன்பில குறித்த சவாலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment