Header Ads



''முஸ்லிம்களுக்கு உதவத்தான் அவர் சிரியா சென்றார்'' - பிரிட்டன் டாக்சி டிரைவரின் மனைவி

பிரிட்டனை சேர்ந்த டாக்சி டிரைவரான ஆலன் ஹென்னிங்கை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். வாதிகள் அடுத்து அவரை தலை துண்டித்து கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர். 

ஐ.எஸ். வாதிகளின் இம்மாதிரியான முடிவு ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், அவரது குடும்பத்தினரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது கணவரை விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி பார்பாரா ஐ.எஸ். வாதிகளுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். கணவர் ஹென்னிங் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவத்தான் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் சிரியா சென்றதாக பார்பாரா கூறியுள்ளார். 

முழுக்க முழுக்க மனிதாபிமான எண்ணம் கொண்ட ஹென்னிங் கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய நாட்டில் பிணைக்கைதியாக சிக்கிக்கொண்டதாக கூறியுள்ள பார்பாரா, அவரை பிணைக்கைதியாக பிடிக்கும்போது கூட   பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அவர் ஆம்புலன்ஸ் வண்டியில் உணவு பொருட்களையும், குடிநீரையும் எடுத்து சென்றதை சுட்டிக்காட்டியுள்ளார். 

அவரது செயல் இரக்க மணத்தை மட்டுமே கொண்டது. மற்றபடி அவரது செயல்பாட்டில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று பார்பரா மேலும் கூறியுள்ளார். இனியாவது ஐ.எஸ். வாதிகள் இரக்க மனதுடன் அப்பாவியான ஹென்னிங்கை விடுவிக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

1 comment:

  1. support against IS is the reason which they want to kill the uk taxi driver... so ask ur PM to relesse the support against IS. then IS people autamatically release the driver

    ReplyDelete

Powered by Blogger.