Header Ads



ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்வது தற்கொலைக்கு சமமானது - சிங்களப் பத்திரிகை

ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள் குறித்து அரச பேச்சாளர்கள் எதைச் சொன்னாலும் இந்த முடிவுகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் இந்த முடிவுகளை வைத்து ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமானதென சில அமைச்சர்கள் கருதாது வெளியிட்டதாகவும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போது எழுந்துள்ள சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை விடுத்து அரசியலமைப்பில் மறு சீரமைப்பை மேற்கொள்வது சிறந்ததென சில அமைச்சர்கள் கருதுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான போக்கை ஓரளவாவது குறைத்துக்கொள்ள முடியுமென்பது அவர்களது கருத்தாகும்.

அரசாங்கம் ஊவா மாகாணத்தில் மேற்கொண்ட பிரசாரம் மற்றும் நிவாரணம் வழங்கிய விதம் குறித்தும் அரசுக்குள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வரட்சி நிவாரணம் வழங்கும் போர்வையில் பணம் வழங்கும் நடவடிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் தடுத்து நிறுத்திய பின்னரும் நீதிமன்ற ஆணையைப் பெற்று நிவாரணமாக பணம் விநியோகம் செய்தது குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டுமென்றும் சிலர் கருதுகின்றனர் எனவும்.

அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.