Header Ads



தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புகள்..!

ஊவா மாகாண சபை தேர்தலில் பெறப்பட்ட வெற்றி பொதுமக்களின் வெற்றி என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியிலேயே அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா இந்த கருத்தினை வெளியிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பி. யும் எமது வெற்றியினை பறித்துக்கொள்ள முயற்சித்தன.

அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்திகளை ஸ்தம்பிதம் அடைய செய்யும் வகையில் அவர்கள் செயல்பட்டாலும் பெரும்பான்மையான மக்கள் அதனை புறுக்கணித்து எமது அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக ஊவா மக்கள் தமது வாக்களிப்பின் ஊடாக எமக்கு சாதகமாக செயல்பட்டதாக அந்த கட்சியின் பொது செயலாளர் திஸ்ச அத்தநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரசாங்கம், வாக்குகளை பெறுவதற்காக பல தந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த பெறுபேறுகள் மூலம் எமக்கு கிடைக்கப்பட்ட வெற்றியினை அனுபவமாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக்கூடிய அனுகூலமான நிலையில் உள்ளதாக திஸ்ச அத்தநாயக்க குறிப்பிட்டார்.

நேற்றைய தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னரை விட எமது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே நடைபெற்ற பல தேர்தல்களில் நாம் படிப்படியாக முன்னேறிக் கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் நாட்டின் போக்கை மாற்றக்கூடிய சிறந்த வகையில் ஜே.வி.பி. செயல்படும் எனவும் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டினார். 

1 comment:

  1. ஆளும் கட்சி எவ்வளவோ திருகு தாளங்களை செய்துதான் வெற்றியை பறித்து எடுத்துள்ளார்கள்,

    ஆதரவற்று நின்ற ஐ.தே,க இந்தளவு வெற்றி பெற்றுள்ளது எனும்போது அது பாரிய வெற்றிதான்.

    இராணுவத்தின் கையில் ஆட்சியைக்கொடுக்க மக்கள் விரும்பவே இல்லை.

    ஜே.வி.பி முன்னேற்றம் கண்டுள்ளது.

    இரண்டு பாரிய கட்சிக்கும் இடையில் நடந்த சண்டையில் உண்டான நெருப்புபொரியில் சுருங்கி சுக்காகிவிட்டது. நம்பிக்கையும் நாணயமும் அவர்களாலேயே கெட்டுபோய் விட்டன.

    ReplyDelete

Powered by Blogger.