உதய கம்மன்பில எப்போது பதவி விலகுவார்..?
மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில காரணமாக ஜாதிக ஹெல உறுமய தார்மீக நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி விவாதமொன்றில் அமைச்சர் உதய கம்மன்பில கலந்து கொண்டிருந்தார். அவருடன் ஐ.தே.க. வின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது ஹரினின் வாதங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய அமைச்சர் உதய கம்மன்பில, தேர்தலில் ஹரினுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் விருப்பு வாக்குகளைப் பெற முடியாது என்று கிண்டலடித்தார்.
அவ்வாறு ஹரின் பெர்னாண்டோ 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறும் பட்சத்தில் தான் அமைச்சர் பதவியைத் துறப்பதாகவும் உதய கம்மன்பில சவால் விட்டார்.
தேர்தலில் 50 ஆயிரம் போன்று மூன்றரை மடங்கு விருப்பு வாக்குகளை ஹரின் பெற்றுள்ள நிலையில், உதய கம்மன்பில எப்போது பதவி விலகுவார் என்று சிங்கள ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
பதவி ஆசை அற்றவர்கள், சொல்வதை செயலில் காட்டுபவர்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் தங்களைப் பற்றி ஜாதிக ஹெல உறுமய கட்டமைத்துள்ள பிம்பம் தற்போது கிண்டல் செய்யப்படுகின்றது.
இந்த விவகாரம் தற்போது ஜாதிக ஹெல உறுமயவுக்கு தார்மீக நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. எனினும் அமைச்சர் உதய கம்மன்பில இது தொடர்பில் கருத்துகள் எதனையும் தெரிவிக்கவில்லை.
Post a Comment