நீங்கள் சேர்ந்து வருவீர்களாக இருந்தால், நாம் உங்களுடன் இணைந்து செயற்பட தயார் - ஞானசாரர்
மாற்றத்தை கொண்டு வருவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அனுரகுமார திஸநாயக்காவிற்கும் ஒரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டு உள்ளகரங்கில் நடைபெற்றுவரும் பொதுபல சேனாவின் இன்றைய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த காவியுடைக்கு அதிகாரத்தில் இல்லாதவர்களை புதிதாக கதிரையில் ஏற்றவும், அதிகாரத்திலுள்ளவர்களை இறக்கவும் முடியும்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களே! இந்த நாட்டில் கட்சிக்கு வேலை செய்தது போதும். பௌத்த மதத்துக்காக செயற்பட வாருங்கள்.
நீங்கள் சேர்ந்து வருவீர்களாக இருந்தால், நாம் உங்களுடன் இணைந்து செயற்பட தயார். உங்களை நாம் அதிகாரத்தில் அமர்த்துவோம். குறைந்தது பட்டதாரியையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். படிப்பறிவில்லாதவர்களை அனுப்புவதனால் ஊழல், மோசடிகள் தான் அதிகரிக்கின்றன.
இந்த நாட்டிலுள்ள சகல தலைவர்களுக்கும் நாம் ஒருவிடயத்தை சொல்கின்றோம். இந்த நாட்டில் லஞ்சம் எடுக்கும் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இந்த நாட்டில் இலஞ்சம் எடுப்பவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர நாம் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
இந்த நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது விருப்புக்குரிய சோபித்த தேரர் பொது அபேட்சகராக வரப் போகிறார். அவரிடம் நாம் கேட்கின்றோம். இந்த நாட்டில் ஜனாதிபதி முறைமையா பிரச்சினை. தயவு செய்து தன்னார்வ நிறுவனங்களின் கைப்பொம்மையாக நீங்கள் மாறிவிட வேண்டாம்.
இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழர்களின் ஆதரவையும் பெற முயலுவோம்.
மியன்மார் மதகுரு விராதுவின் இலங்கை வருகையை தடுக்க முயன்றதற்காக முஸ்லிம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.
பொதுபலசேனா எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டுவருவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அனுரகுமார திஸநாயக்காவிற்கும் ஒரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். அல்லது அவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எமது சிந்தனைகள் பண்டாரநாயக்காவினுடைய சிந்தனைகளாவோ, டி.எஸ் சேனநாயக்காவினுடையதாகவோ இருக்க முடியாது. அவை புத்தரின் சிந்தனைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவா? பொது பலசேன்வுடன் சேர்ந்து அவரது சகோதரரா? என்ன நடக்கபோகின்றதோ பார்கலாம்.
ReplyDelete