இலங்கை வர்த்தக, கைத்தொழில் பெண்கள் அமைப்பின் தலைவியாக றிபா பைசர் முஸ்தபா
(அஸ்ரப்.ஏ சமத்)
இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் - பெண்கள் அமைப்பின் 29 வது தலைவியாக சட்டத்தரணி றிபா பைசர் முஸ்தபா இன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் பதவியேற்றார். கடந்த 6 வருடங்களாக தலைவியாக பதவிவகித்த அபான்ஸ் கம்பணியின் பணிப்பாளர் காலாநிதி சரோஸ் துபாஸ் இருந்து தலைமைப்பதவி றிபா பைசருக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் தலைவர் காலாநிதி அஜித் ஹப்ரால் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இவ் அமைப்பில் உள்ள 150க்கும் மேற்பட்ட வர்த்தக கைத்தொழில் நிறுவணங்களை நிறுவிக்கும் பெண்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். வறுமை, மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு அபிவிருத்திகளை பயிற்சிகளையும் இந் நிறுவனம் செய்து வருகின்றது. அத்துடன் சார்க் பெண்கள் போரம், வெளிநாட்டு உதவிகளுடன் பல்வேறு வியாபார சிறுகைத்;தொழில் நாட்டின் நாலா பாகத்திற்கும் சென்று பெண்களுக்கு உதவி வருகின்றது. இத் திட்டங்களை இலங்கையில் கடந்த 29 வருடங்களாக அமுல்படுத்தி வருகின்றது.
very good fairoos
ReplyDelete