Header Ads



இலங்கை பெண், கத்தாரில் காணாமல் போயுள்ளார்..!

குருணாகலை கலேவெல பிரதேசத்திலிருந்து கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கட்டார் ராஜ்ஜியத்திற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவரை அவரது குடும்பத்தினர் தேடிவருகின்றனர்.

வை.எம்.விமலாவதி என்ற குறித்த பெண் கடந்த 2011 ஆம் ஆண்டு கலேவெல பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் ஊடாக வெளிநாடு சென்றுள்ளார்.

கட்டார் ராஜ்ஜியத்திற்கு சென்று ஆரம்ப சில தினங்களில் தொலைபேசியின் ஊடாக தொடர்புகளை பேணி வந்தவர், பின்னர் அவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என பெண்ணின் கணவர் sfm செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இது தொடர்பாக பலதடவைகள் முறையிட்ட போதும், எந்த பயனும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
குறித்த பெண்ணுக்கு ஒரு பெண் பிள்ளை உட்பட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஒரு ஆண் பிள்ளை தாயாரின் வருகையை எதிர்பார்த்து நோயுற்ற நிலையில் உயிரிழந்ததாக பெண்ணின் கணவர் வை.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முறைப்பாட்டு பிரிவிடம் தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அதிகாரியொருவர், குருணாகலையில் உள்ள தமது பணியகத்தின் கிளை நிறுவனத்திடம் வினவுமாறு தெரிவித்தார்.

அதன், கிளை நிறுவனத்திடம் வினவியபோது, குறித்த பெண் தொடர்பான விபரங்களை கொழும்பில் உள்ள தலைமையகத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து sfm வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரன்தெனியவை தொடர்பு கொண்டது.

2011 ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற வை.எம்.விமலாவதி என்ற பெண் தொடர்பாக ஆராய்ந்து நாளைய தினம் தகவல் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.