இஸ்ரேலின் பிரபல மொசாட் உளவாளி மரணம்
இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் பிரபலமான உளவாளி மைக் ஹராரி தனது 87ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன் னணியில் நின்று செயற்பட்டவராவார்.
ஹராரி, டெல் அவிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்ததாக இஸ்ரேல் குறிப் பிட்டுள்ளது. இவர் 1970களில் மொசாட்டின் முக்கிய உளவு செயற்பாடுகளில் பங்கேற்ற வராவார். 1972 மியுனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரர்களை படுகொலை செய்த ஆயுததாரிகளை இலக்குவைத்து கொலைசெய்த மொசாட் உளவு நடவடிக்கையை முன்னெடுத்ததில் ஹராரி முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
அதேபோன்று 1976 உகண்டாவின் எட் டெப்பே விமான நிலையத்தில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்கும் இராணுவ நடவடிக்கையிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு இவர் தவ றான அடையாளத்தில் நோர்வேயில் கொலை குற்றச்சாட்டுக்கு முகம்கெடுத்தார்.
ஹராரிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இஸ் ரேல் பாதுகாப்பு அமைச்சர் மொ'h யாலொன், மொசாட்டில் இவரது தாக்கம் இன்றும் எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என் றார்.
1927ஆம் ஆண்டு பலஸ்தீன்; பிரிட்டன் ஆட்சியின் கீழ் டெல் அவிவில் பிறந்த ஹராரி பலஸ்தீன நிலத்தில் சட்டவிரோத மான முறையில் யு+தர்களை குடியேற்றுவ திலும் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
Allah iwana iwwulakilum maru ulakilum naasamakkuwaanaaka.
ReplyDelete