சர்வதேச அணுசக்தி அதிகார சபைத் தலைவராக இலங்கை முஸ்லிம் சகோதரர் தெரிவு
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் சர்வதேச அணுசக்தி அதிகார சபைத் தலைவராக இலங்கையர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளின் அணு ஆயுத உற்பத்திகளை கண்காணித்தல், அணுப் பரம்பல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அணுகுண்டு சோதனைகளை தடுத்தல் என்பன இந்த அதிகார சபையின் பொறுப்புகளாகும்.
உலகின் 162 நாடுகள் இந்த அதிகார சபையின் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் இந்த அதிகார சபையின் புதிய தலைவராக வியன்னாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அப்துல் அஸீஸ் தெரிவாகியுள்ளார்.
இதன் மூலம் ஐ.நா.வின் கீழுள்ள சர்வதேச அமைப்பொன்றின் தலைவராக தெரிவாகிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
Post a Comment