அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கிறேன் - சாதனை படைத்த முஸ்லிம் மாணவி (படங்கள் இணைப்பு)
2014 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் தோற்றிய மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்
இம்மாணவி ஐ. எல். எம். நிஸ்வர் மற்றும் ரஜபு நிஷh ஆகிய தம்பதிகளின் புதல்வியாவர்.
இம்மாணவி கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தச் சந்தர்ப்பத்தில் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தன்னுடைய கற்கைகுத் துணை புரிந்த பாடசாiலை அதிபர் கே. எம். பௌமி, ஆரம்பப் பிரிவு ஆசிரியர் எம். இஸட். எம் ஐயூப், வகுப்பாசிரியர் எம். பீ. எம் பழீல் ஆகியோருக்கும் மற்றும் என்னுடைய பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் என்னுடைய பெறுபேறுகளைக் கேட்டு யார் யாரோ சந்தோசம் அடைகின்றார்களோ அனைத்து மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய கல்வியை முயற்சியை முன்னெடுத்துச் செல்வேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் எம் பீ. எம். பழீல் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை இந்த மாணவி 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாணவியுடைய வளர்ச்சியை மூன்றாம் ஆண்டு முதல் காணக் கூடியதாக இருந்தது. பாடசாலையில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெருவாரியாக 100 புள்ளிகளையே அவர் பெறுவார். அது மாத்திரமல்ல ஏனைய தமிழ் தினப் போட்டிகளிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றுள்ளார். கல்வித்துறையில் முதன்மை பெற்று விளங்கும் எமது பாடசாலைக்கு இந்த மாணவியுடைய பெறுபேறு இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் இந்த சமயத்தில் இதற்காக பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
MashaAlla
ReplyDeleteMashaAllah
ReplyDeletePlease, guide this girl to become Muslim VOG. InshaAllah she will reach . Nothing is impossible I learnt from my life. From Dr. Sameem surgeon , national university hospital singapore
Congrats Sama!
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha ALLAH
ReplyDelete