Header Ads



அரியவகை கருப்பு சேவல்


அமெரிக்காவில் அரிய வகை கருப்பு சேவலுக்கு ரூ.1.5 லட்சம் விலை வைக்கப்பட்டுள்ளது. இறைச்சியும் கருப்பு நிறத்தில் இருப்பதால் இவ்வளவு விலை என்கிறார் கோழி பண்ணையாளர். இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட கருப்பு சேவல்கள், தற்போது அரிய வகை இனமாக உள்ளன. மத்திய ஜாவாவிலும் சீனாவிலும் தற்போது காணப்படுகின்றன. இந்த சேவலின் தலை முதல் கால் வரை அனைத்துமே கருப்புதான். இரவு நேரத்தில் வெளிச்சம் படும் போது கரும்பச்சை நிறத்தில் ஜொலிக்கிறது. இந்த சேவல், வெளிப்புறத்தில் எப்படி முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்கிறதோ, அதேபோல் அதன் உள்உறுப்புகள் அனைத்தும் கருப்பு நிறத்தில்தான் இருக்கின்றன. இத்தகைய அரிய வகை கருப்பு சேவல்கள், அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிரீன்பீல்டு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 

ஒரு சேவலின் விலை ரூ.1.5 லட்சம். ஜோடியாக வாங்கினால் விலை தள்ளுபடி உண்டு என்கிறார் கோழி பண்ணை உரிமையாளர். இந்த கருப்பு சேவல் பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகிறது. அத்துடன் இதன் முட்டை மற்றும் இறைச்சி அதிக புரோட்டீன் சத்து நிறைந்தது. இதை இனப்பெருக்கம் செய்வதற்காகவும், அதன் கருப்பு நிற மாமிசத்துக்காகவும் நான் ஒரு ஜோடி பறவையை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று டானா கோவின் என்ற பெண் பெருமையுடன் கூறினார். மொத்தத்தில், இந்த கருப்பு நிற சேவல் தனது அழகான தோற்றத்திலும் விலையிலும் அமெரிக்க மக்களை கவர்ந்து வருகிறது.

2 comments:

  1. உண்மை அதிசயம்...

    ReplyDelete
  2. உண்மை அதிசயம்...

    ReplyDelete

Powered by Blogger.