பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம், மார்ச் மாதத்துடன் இலங்கைக்கு வராது..!
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிறுவனம் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் கொழும்புக்கான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
2015 மார்ச் மாதம் 28ஆம் திகதியுடன் கொழும்பு மற்றும் மாலைதீவுக்கான தனது சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிறுவனம் நிறுத்திக் கொள்கிறது.
இலங்கையின் யுத்த சூழ்நிலைகளால் 15 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2013ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலேயே பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் கொழும்புக்கு தனது சேவையை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், குறித்த நிறுவனம் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு தனது சேவையை விஸ்தரித்திருக்கும் காராணத்தினாலும், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நேராக லண்டன், ஹீத்ரோவுக்கு தனது சேவையை ஆரம்பித்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் எயார்வேஸ் மேலதிகாரியான கிறிஸ்டோபர் ஃபோர்டைஸ் கூறுகையில்,
கொழும்பு மற்றும் லண்டனுக்கிடையே இயக்கப்படும் விமானம் போதுமான லாபம் ஈட்டுவதில்லை எனவும், லண்டன் மற்றும் மாலிக்கிடையே கோடை காலத்தில் அதிக பயணிகள் பயணிப்பதால் அந்த தடத்தின் விமான சேவை கோடை காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக பாதிக்கப்படும் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும், விமான நிலைய அதிகாரிகள், அரசு, சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
Post a Comment