இனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி - தயான் ஜயதிலக
அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவவில்லை என்பது உண்மை. எனினும், 2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.
தார்மீக ரீதியாக அரசாங்கம் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியாக நாடு அடைந்த தோல்வி, இனவாத கொள்கைகள் மற்றும் குடும்ப அரசாட்சி போன்ற காரணிகளினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே அரசாங்கம் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராமல் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்க முடியாது.
அபிவிருத்தி மற்றும் போர் வெற்றி போன்ற காரணிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்களை வெற்றிகொள்ள முடியாது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சிக்குள் சில முரண்பாட்டு நிலைமைகள் வெடிக்கக் கூடும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவாகவோ தனித் தனியாகவோ கட்சி தாவக்கூடும்.
குடும்ப அரசியல் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துவது சாதகமான நிலைமையை ஏற்படுத்திவிடாது.
ஜனாதிபதி தேர்தலின் மூலம் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை நடாத்தினால் அதன் மூலம் ஓரளவிற்கு நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment