Header Ads



அளுத்கமயில் எமது வீடுகளுக்கு தீ மூட்டப்படுவதை பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் - நீதிமன்றத்தில் மனு

அளுத்கம பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை நிலைமையின் போது ஏற்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் 05-09-2014 உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கே. ஸ்ரீபவன், புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

வழக்கில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவிந்த பெர்ணான்டோ,

இரண்டு மனுக்களில் ஒரு அமைப்பு சம்பந்தமாக கூறப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பிடம் மனுதார்கள் என்ன கோருகின்றனர் என்பது குறிப்பிடப்படவில்லை எனக் கூறினார்.

எவ்வாறாயினும் எந்த அமைப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அத்தியாவசியமில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.

அளுத்கம பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வன்முறையின் போது தமது வீடுகளுக்கு தீ மூட்டப்படுவதை பொலிஸார் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது குறித்து தாம் கவலையடைவதாக மனுதார்கள் கூறியுள்ளனர்.

இந்த இரண்டு மனுக்களும் அடுத்த மாதம் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

3 comments:

  1. நீதி அமைச்சருக்கோ நீதியில் ஆப்பு, இது வேர இடையில காமட

    ReplyDelete
  2. கண்டிப்பா ஒன்கட வேட்டுகளை இந்த அரசாங்கத்துக்கு போட்டு வெல்ல வைங்க அப்பதான் மிச்சமுள்ள பள்ளிகளையும் முஸ்லிம்களின் இடங்களையும் ஒரு கை பார்க்கும். எந்த அரசாங்கத்திலாவது. இப்படி மோசமான காரியங்கள் நடந்ததா யோசித்துப்பாருங்கள். இதை எந்தளவு பெளத மக்கள் உணர்கின்றார்களோ அந்தளவு எல்லோருக்கும் வெற்றி.

    ReplyDelete
  3. First looted the valuables form the house and then they made fire. All this happened during curfew and in front of security authorities. This was well planned act of certain individual those who have power in their hand. May Allaah grant hidaayath for those people or punish in this world because culprits were not punished according the law.

    ReplyDelete

Powered by Blogger.