ரிசாத்தின் அலுவலகத்தினுள் அத்துமீறிய பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லை
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமைச்சரவைக்குள் பலாத்காரமாக நுழைந்ததாக கூறப்படும் பொதுபல சேனாவின் பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லையென பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரரைத் தேடி, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அலுவலகத்தினுள் பொதுபல சேனா அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொதுபல சேனாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 11-09-2014 குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பொதுபல சேனாவின் பிக்குமார் அலுவலகத்தினுள் நுழைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தொடர்பில் இன்னும் விசாரணை நடாத்தி வருவதாகவும், இதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் எனவும் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் கோட்டை மஜிஸ்த்ரேட் நீதிபதி திலினி கமகேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பிலான வழக்கு விசாரணை ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment