நவாஸ்செரீப் பெயரை எழுதி பன்றியை அடித்து கொன்றார்கள்
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரிக்–இ–இன்சாப் கட்சியினரும், மதகுரு தெக்ருல் காத்ரியின் பாத் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 40 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாராளுமன்ற வளாகத்தில் முகாமிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக மறுத்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற வளாக பகுதிக்குள் ஒரு காட்டு பன்றி தவறுதலாக புகுந்து விட்டது. அதை தகிருல் காத்ரியின் ‘பாத்’ கட்சி தொண்டர்கள் பார்த்து விட்டனர்.
உடனே அதை விரட்டிப் பிடித்து அதன் கால்களை கேபிள் வயர்களால் கட்டினர். அதன்மீது ‘நவாஸ் செரீப்’ பெயரை எழுதினர்.
பன்றியை ‘நவாஸ் செரீப்’ என உருவகப்படுத்தி அதை தெரு தெருவாக இழுத்து சென்றனர். பின்னர் தங்கள் ஆத்திரம் தீர அதை தடியால் அடித்து சித்ரவதை செய்தனர்.
ஆனால் அடி–உதை தாங்காமல் காட்டுப்பன்றி பரிதாபமாக இறந்தது. அதை பார்த்து போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Post a Comment