பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தாது, அரசாங்கத்துடன் நேரடியாக பேசுங்கள் - கோதபாய
பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் கோரியுள்ளார். ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது குறித்து அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளரர்.
ஏதேனும் சிக்கல்கள் முரண்பாடுகள் காணப்பட்டால் அது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன செயலகம் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நகர அலங்காரம் போன்ற விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம்செலுத்தப்பட வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார். தேசிய சமாதானப் பேரவை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நடத்திய சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். gtn
சர்வதேச மயப்படுத்துவதனால்தான் எல்லோரது பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவதாக நீங்கள் ஏற்றுக்கொண்டதுடன் சரி அவ்வளவுதான்.
ReplyDelete