ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பறித்தவர்கள் யார்...?
(நஜீப் பின் கபூர்)
ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு எங்களுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேடைகளில் முழங்கியவர்கள்,
இப்போது நாம் அவருடைய பேச்சைக் கேட்டு, இவருடைய பேச்சைக் கேட்டுத்தான் இணைந்து போட்டியிட்டோம் இப்போது அந்த முயற்சி வெற்றி பெற வில்லை என்று கூறி அதற்கும் இப்போது நியாயம் கூறத்துவங்கி இருக்கின்றார் மு.கா.செயலாளர் ஹசனார் அவர்கள்.
ஊவாவில் இருக்கின்ற முஸ்லிம் வாக்கு எண்ணிக்கையில் இது சாத்தியம் இல்லை என்று நாம் ஊடகங்கள் வாயிலாக விளக்கிய போது அதனை மேடைகளில் விமர்சனம் செய்தவர்கள் இப்போது இந்த முயற்ச்சி வெற்றிபெற வில்லை என்று நாம் அன்று கூறிய விடயங்களை இன்று பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
மேடைகளில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்றவர்கள் இப்போது சுருதியை மாற்றி முயற்ச்சி வெற்றி பெறவில்லை என்று கூறுகின்றார்கள.; எனவே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாக இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டே இருப்பார்கள். சமூகம்தான் இவர்கள் விடயத்தில் ஒரு நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டி இருக்கும்.
இவர்கள் கதைகள் ஒரு புறம் இருக்க, கடந்த 2009 தேர்தலில் மு.கா. ஊவாவில் போட்டியிட்டு 4015 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அமீர் என்பவர் அன்று 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போகின்றார். எனவே இங்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பறித்தவர்கள் யார்?
2014 தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட இரு முஸ்லிம்களும் (15686நசீர் 15003அமீர்) வெற்றி பெற இன்னும் 4500 வாக்குகள் தேவைப்பட்டது. இங்கு இரட்டை இலைக்காரர்கள் 5045 வாக்குகளைப் பெற்று ஆசனங்கள் இல்லாமல் வெளியேறுகின்றார்கள். எனவே இந்த முறையும் ஊவா முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதற்குப் பொறுப்பாளிகள் யார் என்பதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment