சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் அமெரிக்காவுக்கு முதலிடம்
சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்க மின் உலைகளே உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் ஐ.நா.வின் பருவநிலை மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள நிலையில், எலிசபெத் அவுட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, 2012-ஆம் ஆண்டு அமெரிக்க மின் உலைகள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக கார்பனை உமிழ்ந்துள்ளது. அது மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். உலகில் காற்றை மாசுபடுத்தும் முதல் 100 மின் உலைகளில் அமெரிக்க மின் உலைகள் முதலிடத்தில் உள்ளன. அமெரிக்கா முழுவதும் சுமார் 2,154 பவர் பிளாண்டுகள் இருக்கின்றன.
Post a Comment