அரசை பீடித்துள்ள அச்சம், பழைய தேர்தல் முடிவுகள் அகற்றம், ஊடகங்களுக்கு அழுத்தம்
2014 ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகளை கடந்த கால மாகாணசபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு செய்திகளை வெளியிடவேண்டாம் என அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஊவா மாகாண சபை தேர்தலில் கடந்த தடவையை விட இம்முறை குறைவான வாக்குகளே கிடைக்கப்போகின்றன என தெரிந்ததும் அரசாங்கம் கவலையடைந்தது.
கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளுடன் இம்முறை கிடைத்த வாக்குகளை ஊடகங்கள் ஒப்பீடு செய்வது; அரசிற்க்கு தெரிந்திருந்தது.
இதன் காரணமாக துரிதமாக செயற்பட்ட அரசாங்க தரப்பு ஜனாதிபதி ஊடக பிரிவின் ஊடாக அரச ஊடகங்கள் மீதும், அரச சார்பு ஊடகங்கள் மீதும் 2014 ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகளை கடந்த கால மாகாணசபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு செய்திகளை வெளியிடவேண்டாம் என்ற தடையை விதித்தது.
இதனை தொடர்ந்து தனியார் ஊடகங்களின் இணையத்தளங்களில் ஊவா தேர்தல் முடிவுகளை கடந்த கால தேர்தல் முடிவுகளுடன் ஓப்பீட்டு வெளியான பல கட்டுரைகள் அகற்றப்பட்டன.
Antha oppeedum thewai illai makkalballaawatraum arinthu wittaarkal pasi pattini kastam eththina naalaikku poruppathu por mudiwukku wanthatha sollichcholli innum kaalam kadaththa mudiyaathu thambi aduththa elactionla pattiya kattittu weetta pôha wendiyathuthan
ReplyDelete