மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்க, பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடாத்திய அமெரிக்கா..!
பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 10 ஆயுததாரிகள் உயிரிழந்தனர்.
அந்த மாகாணத்திலுள்ள தத்தா கேல் நகரையொட்டிய அல்வாரா மாண்டி பகுதியிலிருந்து ஒரு குடியிருப்பைக் குறிவைத்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் ஆளில்லா விமானம் தாக்குதல் நிகழ்த்தியது.
இதில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 10 உயிரிழந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இதே பகுதியில் கடந்த மாதம் 6-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆதிக்கம் நிறைந்த வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஜூன் மாதம் முதல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களிலும் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே UN இல் உரையாற்றும் பொழுது பாதுகாப்பு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்புரிமை பெற்றுள்ளமை தவறானது என்றும் அடுத்த நாடுகளின் சுயாதிபததியத்தில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்வதற்காக ஐ நா ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மேற்கொள்ளும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் சிவிலியன் கொல்லப்படுவதனை தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment