யெமன் தலைநகரை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள்...!
யெமன் தலைநகர் சனாவின் பிரதான தளங்களை கைப்பற்றியது "வெற்றிகரமான புரட்சி" என்று அந்நாட்டின் சிறுபான்மை 'pயா ஹவ்தி கிளர்ச்சி தலைவர் வர்ணித்துள்ளார்.
தமது கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிர்ப்பந்தித்ததாக கிளர்ச்சியாளர் தலைவர் அப்துல் மலிக் அல் ஹவ்தி குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவர ஹவ்திக்களுக்கும் அரசுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன்பாடொன்று எட்டப்பட்டது.
ஹவ்திக்கள் தலைநகரை கைப்பற்றியிருப்பது சிவில் யுத்தத்திற்கே வழிவகுக்கும் என்று யெமன் ஜனாதிபதி அப்தர்ரப்பு மன்ஸ{ர் ஹதி எச்சரித்திருந்தார். அண்மையில் நடந்த மோதல்களில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஐ.நா. மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற உடன்பாட்டின்படி ஹவ்திக்கள் மற்றும் தெற்கில் போராடும் பிரிவினைவாதிகளின் பரிந்துரையில் பிரதமர் நியமிக்கப்பட்டு புதிய அரசு அமைக்க இணக்கம் ஏற்பட்டது. "இந்த பாரிய முயற்சி ஒரு பாரிய வெற்றியை தந்திருக்கிறது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அனைத்து மக்களுக்கும் பதில் கிடைக்கும்" என்று செவ்வாயன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அல் ஹவ்தி குறிப்பிட்டார்.
யெமனின் பிராதான சுன்னி கட்சியான இஸ்லாஹ்வுடன் ஒத்துழைப்புடன் செயற்படவும் அல் ஹவ்தி அழைப்பு விடுத்தார். இஸ்லாஹ் ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களே ஹவ்திக்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment