சவுதி அரேபியாவில் மதுபானசாலை முற்றுகை..!
சவுதி அரேபியாவில் இந்தியர்களால் கள்ளத்தனமாக நடத்தப்பட்டு வந்த மதுபானத் தொழிற்சாலையை அழித்ததுடன் இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்டை நாட்டிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட பின்னர் இங்கு இவை பாட்டில்களில் அடைக்கப்பட்டதாக பத்திரிகை செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்த மதுபானத்தை டெட்டாலுடன் கலந்து அதன் நிறத்தை மாற்றி வெளிநாட்டு மதுபானம் என்று வாடிக்கையாளர்களை நம்ப வைத்துள்ளனர் என்று கிழக்குப் பகுதி மாகாணத்தின் போதை மருந்து தடுப்புத்துறையின் செய்தித் தொடர்பாளரான சல்மான் அல் நஷ்வான் தெரிவித்துள்ளார். ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை அவர் குறிப்பிடவில்லை.
இங்கிருந்து ஏராளமான காலி பாட்டில்களையும், கேன்களில் நிரப்பப்பட்ட மதுபானத்தையும், 2,04,000 சவுதி ரியாலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நிறைய டெட்டால் பாட்டில்களும் அங்கிருந்து எடுக்கப்பட்டதாக செய்தி அறிக்கை குறிப்பிட்டது. ஏராளமான வெளிநாட்டு மதுபான ஸ்டிக்கர்களும் இவர்கள் பயன்படுத்திய வாகனத்திலிருந்து மீட்கப்பட்டதாக அல் நஷ்வான் தெரிவித்துள்ளார்.
Post a Comment