முகம் சிதைந்த யஹ்யாவுக்கு, ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை
முகம் சிதைந்த நிலையில் பிறந்த மொராக்கோ சிறுவனுக்கு ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மொராக்கோவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் யாஹ்யாவுக்கு, முகத்தில் கண்களோ, மூக்கோ இல்லை. கண்கள் மற்றும் மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் சிறு துளைகள் மட்டுமே உள்ளன. அவனால் வாய் பேசவும் முடியாது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக திரிஷ்ணா, கிருஷ்ணாவை தனித்தனியே பிரித்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த அறுவை சிகிச்சை நிபுணர் டோனி ஹோல்ம்ஸ், யாஹ்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஹோல்ம்ஸ் கூறுகையில், தாங்கள் மனிதர்களைப் போல இருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இந்த குழந்தையின் முகம் மனித முகம் போன்று இல்லை. எனது மிகப்பெரிய சந்தேகமே, இச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதுதான். மற்றுமொரு மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்த சிறுவன் எப்படி செயல்படுகிறான், இவனது மூளை எவ்வாறு இயங்குகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த குழந்தையின் நிலையை சமூக வலைளதம் மூலம் அறிந்து கொண்ட மெல்போர்னைச் சேர்ந்த பாத்திமா பகாரா என்பவர்தான், குழந்தைக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.
Post a Comment