தனது காலை இழந்த எம்.பி. வழக்கு தாக்கல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உரிய தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை எனக் கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும வழக்குத் தாக்கல் செய்ய உள்ளார்.
அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும கால் ஒன்றை இழக்க நேரிட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் காயமடைந்ததுடன், வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது.
வீதிக்கு ஏற்பட்ட சேதமான 550,000 ரூபாவினை செலுத்தி வாகனத்தை மீட்டுச்செல்ல முடியும் என வீதி அபிவிவருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உரிய தரத்தில் பாதை அமைக்கப்படாமையினால் விபத்து ஏற்பட்டதாகவும் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
நியாயம் என்றால் தமக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமே தவிர, வீதி அபிவிருத்தி அதிகார சபை தம்மிடம் நட்டஈடு கோருவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment